×

வடிவேலுவ வச்சி வெப் சீரிஸ்… இயக்குனர் யார் தெரியுமா? ஷாக்கிங் காம்பினேஷன்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்க இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் வடிவேலுவை நடிக்க வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன,
 

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்க இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் வடிவேலுவை நடிக்க வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன,

வடிவேலு சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் பாரதிராஜா இயக்கிய படங்களில் சிலவற்றில் நடித்தார். அதிலும் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தமிழ் செல்வன் ஆகிய படங்களில் அவரது நகைச்சுவைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. ஒரு கட்டத்தில் பாரதிராஜா இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்ததால் வடிவேலுவை தன் படங்களில் அவர் பயன்படுத்தவில்லை. இதற்கிடையில் வடிவேலு தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக மாறிவிட்டார்.

இந்நிலையில் இப்போது 20 ஆண்டுகளுக்கும் பிறகு பாரதிராஜாவும் வடிவேலுவும் ஒரு வெப் சீரிஸுக்காக இணையப் போவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News