×

ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி
சொல்வது யார் தெரியுமா...?

 
ilaiyaraja

இசைஞானிக்கு முதல் படம் அன்னக்கிளி. முதல் படமே அவருக்கு மெகா ஹிட். இந்தப் படத்தில் தான் மச்சான பாத்தீங்களா என்ற பாடல் இடம்பெறுகிறது. அன்றைய காலகட்டத்தில் திருவிழா, திருமணம், மங்கல நிகழ்ச்சிகள் என எது இருந்தாலும் ஒலிப்பெருக்கியில் இப்பாடல் தவறாது இடம்பெறும். வானொலியில் அடிக்கடி நேயர்கள் விரும்பி கேட்கும் பாடலாகவும் இது இருந்தது. அன்று தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று வரை வெற்றி நடைபோடவே செய்கிறது. இவரது இசை மழையில் நனைந்து சுகம் காணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல இளைஞர்களின் இரவுகளை ஆனந்த இரவாக்கிய பெருமை இவரது இசைக்கு உண்டு. இரவுப்பணியில் ஈடுபடுபவர்கள் யாராயிருந்தாலும் இளையராஜா பாட்டப் போடுப்பா...என்று தான் சொல்கிறார்கள். மொபைலில் இசைப்பிரியர்களாக எவர் இருந்தாலும் குறைந்தது 500 முதல் 1000 இளையராஜா பாடல்களாவது அவர்களது மொபைலில் உள்ள மெமரி கார்டில் சேமிக்கப்பட்டு இருக்கும். 


மகிழ்ச்சி, அழகு, நடனம், நட்பு, காதல், சோகம் என அத்தனை உணர்வுகளையும் தன் இசையால் நம் கண் முன் நிறுத்தி தெவிட்டாத தேனமுத பாடல்களை நம் காதுகளுக்கு விருந்தாக படைப்பார். அதற்கு உதாரணமாக நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலில் அத்தனை அழுத்தத்தையும் வெளிப்படுத்தி இருப்பார். இந்த பாடலை எப்போது கேட்டாலும் நம்மை மறந்து நாமும் கூடவே ரசனையுடன் பாட ஆரம்பித்துவிடுவோம்.

இசையை கரைத்துக் குடித்தவர் இளையராஜா. அதனால் தான் இசைக்கே ஞானி என்று அழைத்து வருகிறோம். இசைக்கு மொழி கிடையாது. இசை என்பது ஒரு ஓசை என்பதை இளையராஜாவின் பல பாடல்கள் மெய்ப்பித்துள்ளன.

இளையராஜா தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை சுரங்கம். இன்று இவர் தனது 78 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார.; அவருக்கு திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன், பார்த்திபன், பாடகி சித்ரா ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளவர்கள். 

கமல்ஹாசன்

இசைக்கு இளைஞர் இளையராஜா என் மனதுக்கு கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
- டிவிட்டரில் கமலின் ட்வீட் இது.
 
பார்;த்திபன் 

பார்த்திபன் தனது டுவிட்டரில், கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம். கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை. நம் மனம் ஏன் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி. 


தரைமார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம். கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம். ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம். ஆனால் பக்தி மார்க்கமாகவே மாயசக்திகள் உணரலாம். உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன். அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன். அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு.இளையராஜா அவர்கள் (பக்தி - அகம் நோக்கி ஊர்தல்) 

பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன். பிறந்தநாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே...அதுதான் அறியாமை என்பது.

பாடகி சித்ரா 

பின்னணிப் பாடகி சித்ரா, வெளியிட்டுள்ள வீடியோவில், இன்னைக்கு இசைஞானி இளையராஜா சாரோட பிறந்தநாள். சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். நீங்க எனக்கு ஒரு குருவா, ஒரு அப்பாவோட இடத்துல இருந்து ஆலோசனைகள் கொடுத்து என்னை வழி நடத்துனீங்க. உங்களைப் பார்த்து ரொம்ப நாளாகுது. இந்த கோவிட்னால ஒருவருக்கொருவர் பார்க்க முடியலை. இநத ஒரு தருணத்துல உங்களுக்கு தீர்க்காயுசும், ஆரோக்கியமும், நல்லிசையும் எல்லா வல்ல கடவுள் அள்ளிக்கொடுக்கணும்னு நானும் பிரார்த்திக்கிறேன். இன்னும் 100 வருஷம் உங்க இசைப்பயணம் வெற்றிகரமாக அமையணும். உங்க இசையில் நான் பாடின ஒரு பாட்டு உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன். என கிழக்கு வாசல் படத்திலிருந்து வந்ததே ஓ ... குங்குமம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News