×

அவசர கதியில் ரகசிய திருமணம் ஏன்? - நடிகர் யோகிபாபு விளக்கம்
 

யாருக்கும் தெரியாமல் ஏன் ரகசிய திருமணம் என்பது குறித்து நடிகர் யோகிபாபு விளக்கம் அளித்துள்ளார்.
 

சந்தானமும், வடிவேலுவும் இல்லாத நிலையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்திருக்கிறார் யோகிபாபு. முரட்டு சிங்கிளாக வலம் வந்த அவருக்கு கடந்த சில மாதங்களாகவே திருமணம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்ததை. ஆனால், அவற்றை வதந்தி என அவர் மறுத்து வந்தார். என் திருமணம் எல்லோருக்கும் தெரியும் படி நடக்கும் என்றார். 

ஆனால், திடீரென திருத்தனி கோவில் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள யோகிபாபு ‘என் குடும்ப சூழ்நிலை காரணமாக அவசர நிலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.  என்ன முடிவெடுப்பது என்கிற குழப்ப நிலையில் இருந்தேன். என் திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கும் இருக்கிறது. வருகிற மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளேன். அந்நிகழ்ச்சிக்கு அனைவரையும் முறைப்படி அழைப்பேன். விரைவில் சந்திப்போம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News