அஜித்தை பாதித்த விஷயம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க இதான் காரணமா?

எதிர்பார்த்தது இல்லை: விடாமுயற்சி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாகி இருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதுதான் பல பேரின் கருத்தாக இருக்கின்றது. ஆனால் அஜித் ரசிகர்கள் வழக்கம்போல் தல ,மாஸ் ,அஜித்தே கடவுளே என அவரை கொண்டாடி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் கருத்து: படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு வருடங்கள் கழித்து தல தரிசனம் எங்களுக்கு கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் சோசியல் மீடியாக்களில் விடாமுயற்சி படத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கின்றன. அதற்கு காரணம் அஜித் என்றால் மாஸ். அது அனைவருக்குமே தெரியும்.. அவர் மட்டுமல்ல. இன்று தமிழில் பல பெரிய முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி விஜய் அஜித் இவர்களுக்கு என ஒரு தனி கிரேஸ் மாஸ் ஓபனிங் இருந்து வருகிறது.
டோட்டல் இமேஜ் டேமேஜ்: அது அவர்களுடைய படம் ரிலீஸ் ஆகும் போது ஏதாவது ஒரு வகையில் குறைந்துவிட்டால் ரசிகர்கள் கொந்தளித்து விடும்வார்கள். அது எப்படி என் தலைவனை இப்படி காட்டலாம் என ஒட்டுமொத்த படக்குழுவையும் திட்டி தீர்த்து விடுவார்கள். அப்படித்தான் விடாமுயற்சி படத்திலும் அஜித்தின் இமேஜை குறைக்கும் அளவுக்கு சில காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
கண்டன் ஓரியண்டட் படம்: ஆனால் பெரும்பாலான அஜித் ரசிகர்கள் அஜித் ஒரு நல்ல மனிதர். அவர் எதற்கு இந்த படத்தில் நடித்தார் என எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. படம் நல்ல படம் .ஹாலிவுட் தரத்தில் எடுத்திருக்கிறார்கள் .கன்டென்ட் ஓரியண்டான படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் அஜித். அதனால் இது ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க வேண்டிய படம் தான். மற்ற திரைப்படம் மாதிரி இது இல்லை. என்றாலும் குடும்பமாக இருந்த படத்தை வந்து பார்க்கலாம் என சில பேர் கூறி வருகிறார்கள்.
பாதித்த விஷயம்: இந்த நிலையில் அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்பதற்கான காரணத்தை படம் ரிலீசுக்கு பிறகு மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதோ அவர் கூறியது: பெண்களை மதிக்கும் படத்தில் நடிக்க விரும்புவதாக அடிக்கடி அஜித் கூறுவாராம். பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த செய்தி அஜித்தை எப்போதும் மனதளவில் பாதித்ததாம். அதனால் அதுபற்றிய வலுவான மெசேஜ் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.
இருப்பினும் ரசிகர்கள் சில கமர்ஷியல் விஷயங்களை எதிர்பார்ப்பார்களே என்ற ஒரு அக்கறையும் இந்தப் படத்தில் இருந்திருக்கிறது. சரியான படத்தில் நடிக்கும் போது என் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அஜித் கூறினாராம். அந்த நம்பிக்கை சரியானது என படம் வெளியானதும் புரிந்தது என மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.