Andrea: மல்லுவுட்டில் இதனால்தான் நடிக்கல.. சொல்லிட்டீங்கள? ஆண்ட்ரியா உடைத்த சீக்ரெட்
சினிமாவை பொறுத்தவரைக்கும் குறிப்பாக தமிழில் திறமைவாய்ந்தவர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. கோலிவுட்டில் வியாபாரத்திற்காக மட்டுமே படத்தை எடுக்கிறார்கள். கதை நன்றாக இருக்கிறதா? இவரை நடிக்க வைத்தால் வியாபாரம் இருக்குமா என்றுதான் பார்க்கிறார்கள். இங்கு பணத்தை நோக்கி மட்டுமே சினிமா உலகம் ஓடிக் கொண்டிருக்கின்றது. மற்றபடி 250 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்களை பற்றி என்றைக்குமே கவலைப்பட்டது இல்லை.
இதில் இன்னொரு கொடூரம் என்னவெனில் முன்னணி நடிகர்களின் படம் என்றால் முண்டியடித்துக் கொண்டு இடிபாடுகளில் சிக்கி சில சமயம் உயிரை பணயம் வைத்துக் கொண்டு எல்லாம் படத்தை பார்க்கப் போகிறார்கள். ஆனால் உள்ளே போய் பார்த்தால் கதையாவா எடுத்து வச்சிருக்கானுங்க என்று தலையில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு படம் இருக்கும். இப்படி கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திறமைசாலிகளுக்கு வாய்ப்புகளும் கொடுப்பதில்லை.
ஆனால் மலையாளத்தில் பார்த்தீங்கள் என்றால் சமீபகாலமாக நல்ல கதைகளுடன் கூடிய படங்கள் வெளியாகி கொண்டு வருகின்றன. அதுமட்டுமில்ல அங்குள்ள ஹீரோக்கள் இங்கு சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துவிடுகின்றனர். ஆனால் இங்குள்ள ஹீரோக்கள் அங்கு சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க சொன்னால் நடிப்பார்களா? மலையாள நடிகர்களை பொறுத்தவரைக்கும் நல்ல ரோல் கிடைத்தால் போதும் என்றுதான் பார்க்கிறார்கள்.
அதனால் மலையாள சினிமா இன்று அனைவராலும் கவனிக்கத்தக்க வகையில் மாறியிருக்கிறது. அதுவும் குறைவான பட்ஜெட்டில் அதிக லாபத்தையும் ஈட்டி விடுகின்றனர். ஆனால் இங்கு ஒரு ஹீரோவுக்கே பல கோடிகளை வாரி இறைக்க வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா அவர் நடிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
அதாவது எனக்கு மலையாளம் தெரியாது. தெரிந்திருந்தால் அங்கேயே செட்டிலாகியிருப்பேன். ஏனெனில் அங்கு நல்ல கதைகளுடன் படம் எடுக்கிறார்கள். மலையாளம் தெரியாததனால்தான் என்னால் நடிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆண்ட்ரியாவை பொறுத்தவரைக்கும் அவர் நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார். ஆனால் தமிழ் சினிமா அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுப்பதில்லை. குறிப்பாக வில்லி கேரக்டருக்கு சரியான நடிகையும் கூட ஆண்ட்ரியா.
