×

ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருப்பது ஏன்? திடுக்கிடும் தகவல்

பெரியார் குறித்து அவமரியாதையாக பேசி விட்டதாக ரஜினி மீது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ஒரு சிலர் அவருடைய கொடும்பாவியை எரித்து போராட்டம் செய்தனர். இந்த நிலையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் ரஜினி ரசிகர்கள் ஏன் அமைதி காத்தனர் என்பது குறித்து தற்போது தகவல் வந்துள்ளது

சமீபத்தில் ரஜினி தனது மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பாபா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையின் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. இதில் மன்றத்தினர் யாரும் தலையிட வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்

எனக்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தினாலும் மன்றத்தினர் அமைதி காக்க வேண்டும். மன்றத்தினர் பதிலடி கொடுப்பதை நான் விரும்பவில்லை. எனவே யாரும் சென்னைக்கு வர வேண்டாம். போராட்டம் நடத்தவும் வேண்டாம். அதேபோல் சமூக வலைதளங்களிலும் வீண் விவாதங்கள் வேண்டாம்’ என்று கூறியுள்ளார் இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News