×

உங்க காதல் பிரச்சணையில் என் குடும்பத்தை ஏன்டா இழுக்கிறீங்க! கடுப்பான ஷெரின்

துள்ளுவதோ இளமை, விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஷெரின், கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
 

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான தர்ஷன் மீது நட்பு பாராட்டி வந்த ஷெரினுக்கு அவர் மீது காதல் இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக அவரது காதலி ஷனம் ஷெட்டி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து தர்ஷன் -ஷனம் ஷெட்டி இருவரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளைக் கூறி பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ஷனம் ஷெட்டி - தர்ஷன் இருவரும் பிரிய ஷெரின் தான் காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் ஷெரின் யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. அதில் உங்களது குறுகிய மனப்பான்மை தான் வெளிப்படுகிறது. நான் அமைதியாக இருப்பது என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். நான் இந்த விவகாரத்தில் தொடர்பில்லாததால் பேசாமல் இருக்கிறேன் என பதிலளித்தார்.

View this post on Instagram

🙏🏻

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

From around the web

Trending Videos

Tamilnadu News