Categories: Cinema News latest news throwback stories

மாடர்ன் ரோலால் பல்ப் வாங்கிய தேவயானி… இதனால் தான் அந்த பக்கமே போகலையா!

நடிகை தேவயானி எப்போதுமே தாவனி மற்றும் புடவை கட்டியே நடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதன் பின்னால் ஒரு பெரிய காரணமும் அடங்கி இருக்கிறதாம். அதுகுறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்காக.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. தேவயானி கோயல் என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சினிமாவிற்குள் நுழைந்தார். இப்படம் முதற்கட்ட பணிகளில் இருக்கும் போது சில காரணங்களால் படமே ரத்தானது. ஷாட் பொஞ்சோமி என்ற பெங்காலி திரைப்படத்தில் அடுத்து நடித்தார். தொடர்ந்து தான் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பினார்.

Devayani

மலையாளத்தில் கின்னரிப்புழையோரம் தான் தேவயானியின் முதல் படம். முதல் படத்தில் ரொம்பவே குடும்பாங்காக நடித்தார். தமிழில் அவர் அறிமுகமான தொட்டாச்சிணுங்கி. அவருக்கு நல்ல வரவேற்பை சினிமாவில் பெற்று தந்தது. சிவசக்தி என்ற தமிழ் படத்தில் கிளாமர் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

இதையும் படிங்க: டீக்கு பதிலா சும்மா கதை சொன்ன ராஜகுமாரன்… நான் தான் நடிப்பேன் அடம் பிடித்த தேவயானி.. என்ன படம் தெரியுமா?

ஆனால் அப்படி தேவயானி கவர்ச்சி காட்டிய படங்கள் எல்லாம் மொக்கை படங்களாகவும், ஃப்ளாப்பாகவும் தான் போனது. இதை தொடர்ந்தே இனி நமக்கு இது செட்டாகாது என முடிவெடுத்தார். அடுத்த வந்த காதல் கோட்டை படத்தில் கமலி என்ற வேடத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தார்.

Devayani

அப்படம் மாஸ் ஹிட்டானது. அதனுடன் தன்னுடைய ரூட் இதுதான் என முடிவெடுத்த தேவயானி. அதற்கு பின்னர் ஒரு படத்தில் கூட கிளாமர் ரோல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் தனிமை படத்தில் சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily