ajith
Good Bad Ugly: அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் விலகி அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இணைந்திருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி கொண்டு வருகின்றது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் குட் பேட்அக்லி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருவதாகவும் அதை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் நான்கு நாட்கள் ஷூட்டிங் இருப்பதாகவும் அதனுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பே முடிந்து விடுவதாகவும் தகவல் வெளியானது .
ஆக மொத்தம் மொத்த படப்பிடிப்பும் முடியும் நிலையில் படத்திற்கான முதல் சிங்கிள் கூடிய சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திடீர் திருப்பமாக படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகி இருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்ஷன்
இதற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பதை பற்றி இன்று கோடம்பாக்கத்தில் சிலர் கூறி வருகிறார்கள். அதாவது படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அஜித்தை தேவி ஸ்ரீ பிரசாத் ஒருமுறை சந்திக்கும் பொழுது நாம் இருவரும் இணைந்து படம் பண்ணி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் உங்களுடன் இணைந்து படம் பண்ண விரும்புகிறேன் என கூறினாராம்.
அதாவது வீரம் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளர். அந்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் அதற்கு அஜித் ஓகே என சொல்லியிருக்கிறார் .அப்பொழுதுதான் குட் பேட் அக்லி திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போது தேவி ஸ்ரீ பிரசாத் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக போடலாம் என அஜித் சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது .
ஏற்கனவே புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நேற்று சென்னையில் நடைபெறும் பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை பற்றி ஒரு விஷயத்தை கூறினார். அதாவது தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் கொடுக்க நாட்களாகிவிட்டது. காலதாமதப்படுத்தி விட்டார் எனக் கூறி இருந்தார். இது தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஒரு சிறு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தில் ரீ ரெக்கார்டிங் சாம் சிஎஸ் தான் பண்ணியிருக்கிறாராம். ஏற்கனவே தயாரிப்பு தரப்பினருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் இடையே சின்ன மனஸ்தாபம் இருந்து வருகிறது. மேலும் கங்குவா படத்திலும் ஆடியோ ரைட்ஸிலும் ஏதோ பிரச்சினை இருந்து வருகிறதாம். அதனால் தேவி ஸ்ரீ பிரசாத் மீது ஒரு வித அதிருப்தியில் தான் இருக்கிறது சினிமா.
இதையும் படிங்க: அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்ஷன்
இந்த நிலையில் தான் குட் பேட் அக்லி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைப்பாளர். படத்தின் 75 % படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் ஒரு பாடல் கூட கொடுக்கவில்லையாம். படத்தில் நான்கு பாடல்களாம். இருந்தாலும் ஆதிக் ரவிச்சந்திரன் வேறொரு பாடல்களை ரெஃபரன்ஸாக வைத்து மூன்று பாடல்களுக்கான படப்பிடிப்பை முடித்து விட்டாராம் .
இன்னும் ஒரு பாடல் மட்டுமே இருக்கிறதாம். இதற்கிடையில் தான் இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை நீக்கிவிட்டு ஜீவியை அணுகி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஜீவியிடம் நிலைமையை எடுத்து சொல்லி நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் எனக் கூற ஜீவியும் இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கான எல்லா பாடல்களையும் தருகிறேன் என உறுதி அளித்து இருக்கிறாராம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…