×

ஏன் போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கினார் தனுஷ்... கசிந்த தகவல்

தனுஷின் போயஸ் தோட்ட வீட்டின் பூமி பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது.
 

தனுஷ் தனது குடும்பத்துடன் ஆழ்வார்பேட்டையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தான் போயஸ் தோட்டத்தில் நிலம் வாங்கினார். சமீபத்தில் அங்கு பூமி பூஜை நடைபெற்றது. அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

தனது வீட்டை மாமனார் ரஜினிகாந்த் வீட்டின் அருகிலேயே மாற்றிவிட்டால் சில விஷயங்களை தவிர்க்கலாம் என தனுஷ் நினைப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தன்னுடைய ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு ரஜினிகாந்த் வரும்போது, அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடி விடுவது குடும்ப சந்திப்பை கலைப்பதாக இருக்கிறதாம். மேலும், ஷூட்டிங் இல்லாத நாட்களில் ரஜினிகாந்த் தனது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரம் செலவழிக்க இந்த புது வீடு சுலபமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஐடியாவை ரஜினிகாந்த் தான் முடிவு செய்து இருக்கிறார். அவரின் விருப்பத்தின் பேரிலேயே, அவர் வீட்டின் பக்கத்து தெருவிலேயே தனுஷ் நிலம் வாங்கி இருக்கிறார். வரும் தீபாவளிக்குள் இந்த வீட்டின் கிரஹபிரவேசம் நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தனுஷ் பெரிய விழாவாக நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News