பார்த்து பார்த்து வலிக்கப் போகுது!.. ராயன் ஆடியோ லாஞ்சில் பட்டும் படாமல் பேசிய தனுஷ்!.. ஏன்?..

நடிகர் தனுஷ் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னைச் சுற்றி அதிகமாக பரவும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு எதிராக ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக சுசித்ரா உள்ளிட்ட யாரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசாமல் மறைமுகமாக தனது ரசிகர்களை படம் பார்க்க வைக்கவே பேசியுள்ளார் என்கின்றனர்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் நடக்கும் விவாகரத்து பஞ்சாயத்துக்களுக்கு எல்லாம் தனுஷ் தான் காரணம் என்றும் தனுஷ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் சுசித்ரா பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்தார்.

தனுஷ் பற்றியும் திரிஷா பற்றியும் சுசித்ரா பேசியதற்கு இருவருமே நேரடியாக பதில் சொல்லாமல், மறைமுகமாகவே பேசி வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷ் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பகிரங்கமாக பேசினால், மீண்டும் சுசித்ரா யூடியூபில் வீடியோ வெளியிட்டு படத்துக்கு வேட்டு வைத்து விடுவாரோ என்கிற பயம் தான் எனக் கூறுகின்றனர்.

தனுஷ் சுசித்ரா விவகாரத்தை கார்த்திக் குமாரை வைத்து லீகலாகவே ஆஃப் செய்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என தனுஷ் போராடி வருகிறார்.

தனுஷை சுற்றி வரும் கெட்டப்பெயர் தான் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படம் ஓடாமல் போனதற்கே முக்கிய காரணம் என்றும் கூறுகின்றனர். அப்படி கடைசி நேரத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் ராயன் படம் வெளியானால் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் என கோலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது.

Related Articles

Next Story