Categories: Cinema News latest news throwback stories

விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜீத்!.. என்ன நடந்ததுன்னு தெரியுமா?..

விஜயகாந்துடன் இணைந்து விஜய், சூர்யா, பிரபுதேவா போன்ற இளம் நடிகர்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றனர். ஆனால் அவர்களது சமநடிகரான அஜீத் மட்டும் நடிக்கவில்லை. அந்த வாய்ப்பு அவருக்கு வந்தும் மறுத்து விட்டார். அந்தப் படம் தான் பெரியண்ணா. இதில் அஜீத் நடிக்காததற்கு என்ன காரணம் என்று தயாரிப்பாளர் சுப்பையா சொல்கிறார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

விஜயகாந்தை ஒருமுறை மதுரையில் வைத்து சந்தித்தபோது என்னடா அப்படியே இருக்க… என்னதான்டா பண்ணப் போற? கல்யாணம் முடிஞ்சு புள்ளக்குட்டிகள்லாம் ஆச்சுன்னு கேட்டார். படம் பண்ணப் போறேன்னு சொன்னேன். யாரை வச்சின்னு கேட்டார். உங்களை வச்சித் தான்னு சொன்னேன். டைரக்டர் யாருன்னாரு. எஸ்.ஏ.சந்திரசேகர்னு சொன்னேன்.

என்ன மாதிரி கதைன்னு கேட்ட போது பூந்தோட்ட காவல்காரன் மாதிரி கதைன்னு சொன்னேன். சரி. நீ ரெடி பண்ணிக்க. நான் டைரக்டர்ட பேசிக்கிறேன்னு சொன்னேன். அப்புறம் சந்திரசேகரைப் போய் பார்த்தேன். அவருக்கிட்ட விவரத்தை சொல்லி விஜயகாந்த்கிட்ட பேசினேன்னு சொன்னேன். நிஜமாவான்னு கேட்டார்.

Periyanna

ஆமா… நாளை மறுநாள் வர்றாரு. நீங்களே பேசிக்குங்க. 15 நாள் கால்ஷீட் கொடுத்துருக்காரு. அவரு கூட யூத்தா ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு சொன்னேன். யாரைன்னு கேட்டார். அஜீத்னு சொன்னேன். அப்படின்னா எந்த மாதிரி கேரக்டர்னு கேட்ட போது பூந்தோட்டக்காவல்காரன், செந்தூரப்பூவே மாதிரின்னு சொன்னேன். அவங்க பார்த்துட்டு முடிவு பண்ணட்டும்னு சொன்னேன். அப்புறம் அஜீத்கிட்ட பேசுங்கன்னாரு.

பெரியண்ணா படத்தில் நடிக்கக் கேட்ட போது அஜீத் சார் சொன்ன பதில் இதுதான். நல்ல காம்பினேஷன்னு சொன்னார். அதே நேரத்தில் அவருக்கு அப்போது அடிக்கடி முதுகு வலி வருமாம். அதனால் நல்ல காம்பினேஷனில் நடிக்கும்போது நான் பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம படுத்துக்கிட்டேன்னா அது நல்லாருக்காது. கெட்ட பேரா ஆயிடும். இப்ப நீங்க பண்ணுங்க. அடுத்த படத்துல பார்த்துக்கலாம்னு சொன்னாரு. அது நியாயமான பதிலா தான் இருந்தது. அதுக்கு அப்புறம் தான் சூர்யாவை நடிக்க வைச்சோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1999ல் வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மானஸா, மனோரமா, மணிவண்ணன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பரணியின் இசையில் நடிகர் விஜய் 3 பாடல்களைப் பாடியுள்ளார்.

விஜயகாந்திடம் உதவியாளராகவும், டிரைவராகவும், டச்சப் மேனாகவும் இருந்தவர் சுப்பையா. இவரை தயாரிப்பாளராக்க ஆசைப்பட்டார் கேப்டன். அப்படி வந்த படம் தான் பெரியண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v