×

ரஜினி ஏன் வேலு பிரபாகரனின் பிட்டு படத்துக்கு உதவினார் ? முகநூலில் வைரலாகும் பதிவு!

ரஜினி இயக்குனர் வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் டைரி எனும் படத்துக்கு உதவியதாக சொல்லப்படுவது தொடர்பாக எழுத்தாளர் விநாயக முருகன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

 

ரஜினி இயக்குனர் வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் டைரி எனும் படத்துக்கு உதவியதாக சொல்லப்படுவது தொடர்பாக எழுத்தாளர் விநாயக முருகன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

பெரியார் குறித்த சர்ச்சை ஒன்றை ரஜினி கிளப்பிய வேளையில் அவர் பெரியாரிய கருத்துள்ள படம் ஒன்றுக்கு பணம் கொடுத்து உதவியதாக சொல்லப்பட்டது. அதை இயக்குனர் வேலு பிரபாகரனும் ஒத்துக்கொண்டார். இந்நிலையில் ரஜினி உதவியது எந்த மாதிரியான படம் என்று எழுத்தாளர் விநாயக முருகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ரஜினி ஏன் வேலு பிரபாகரனுக்கு உதவினார் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

பெரியார் திரைப்படம் வெளிவர நடிகர் ரஜினிகாந்த் ஐந்துலட்சம் பணஉதவி செய்ததாக சில செய்திகள் படித்தேன். அந்த திரைப்படத்தின் பெயர் காதல் அரங்கம். படம் ஆரம்பித்து சில பிரச்சினைகள். பிறகு படத்தின் பெயரை காதல் கதை அதற்கடுத்து வேலுபிரபாகரனின் காதல்கதை என்று மாற்றினார்கள். அது ஒரு பிட்டுப்படம். லோபட்ஜெட் பி கிரேடு படங்கள் வெளிவந்து வெற்றிப்பெற்ற காலம் அது. வேலுபிரபாகரனின் காதல்கதை சில பிரச்சினைகளால் நின்றுபோனது. அந்தக்காலத்தில் வேலுபிரபாகரன் ரஜினியை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். ரஜினி தன்னை யாராவது கடுமையாக விமர்சித்தால் அவர்களை அழைத்து சிறுபொருளாதார உதவி செய்து வாயை அடைத்துவிடுவார்.இப்படித்தான் வேலுபிரபாகரனை அழைத்து சிறுபணஉதவி செய்தார். அதற்கே வேலுபிரபாகரன் காலில்விழுந்துவிட்டார்.

Related image

அன்றிலிருந்து ரஜினியை பாராட்டி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். ரஜினி நல்லவர். நான்தான் அவரை தவறாக புரிந்துக்கொண்டேன் என்று ஆனந்த விகடனில் பேட்டிக்கொடுத்தார். பிறகு இன்னொரு விஷயம் எல்லா பிட்டுப்படங்களிலும் இறுதியில் ஒரு டாக்டர் வருவார். சுயஒழுக்கத்தோடு வாழ்வதுப்பற்றி ஐந்து நிமிடங்கள் போதிப்பார். அதுபோல அந்தப்பிட்டுப்படத்தில் வேலுபிரபாகரன் வந்து ஐந்துநிமிடம் பெரியார் சொன்ன கற்புநெறிகளை பற்றி பேசுவார். மத்தபடி அந்தப்படத்துக்கும், பெரியாருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. ரஜினி உதவிசெய்தது பெரியார் திரைப்படத்துக்கு இல்லை. ஒரு பிட்டுபடத்துக்கு’ என அவர் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News