×

சென்னைக்கு ஏன் தான் வந்தேனோ...  பாவமாக புலம்பும் மணிமேகலை

இனிமையான பேச்சு மற்றும் காமெடி கலந்த கலாய் இவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

 

தொடர்ந்து சன் டிவி, சன் நியூஸ் என்று பல நிகழ்ச்சிகளில் முகம் காட்டிய அவர் விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இதற்கிடையில் கடந்த மூன்று மாதங்களாக மணிமகேலை ஊரடங்கினால் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார்.

தற்போது இன்ஸ்டாகிராமில், "நாளையில இருந்து மறுபடியும் லாக்டவுன்.. கடைசி நேரத்தில போய் இந்த காய்கறிகளை வாங்கிட்டு வந்தேன். ஆனால், இதெல்லாம் யாரு சமைக்குறதுன்னு தான் தெரியல... சமையல்கார அக்காவுக்கு Zoom call பண்ணித்தான் சமைக்கணும். முடிச்சா இந்த முறை எதுவும் வெடிக்காம சமைச்சு வீடியோ போடுறேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சென்னைக்கு வரலாமலே இருந்திருக்கலாம்" என  புலம்பி போஸ்ட் போட்டுள்ளார். .  

From around the web

Trending Videos

Tamilnadu News