
Cinema News
ஜக்குபாய் வராமல் போனதற்கு இதுதான் காரணம்!.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்…
Published on
பாபா படத்தின் தோல்விப்படத்தால் ரஜினிகாந்த் வெளியே செல்வதை தவிர்த்தார். விக்ரமோட சாமி படத்தோட 100வது நாள் வெற்றிவிழாவில் ரஜினிகாந்த்தை பேச அழைத்தார் குருநாதர் பாலசந்தர்.
அப்போது ரஜினிகாந்த் பொதுமேடையில் பேசுவதையே தவிர்த்து வந்தார். குருநாதருக்காக சென்றார். அந்த விழாவில் சூப்பர்ஸ்டாரோட பட்டமே நிரந்தரமானது அல்ல. கமிஷனர், கலெக்டர் மாதிரி சூப்பர்ஸ்டார்ங்கறது ஒரு விதமான பதவி.
ஒவ்வொரு காலகட்டத்திலயும் ஒவ்வொரு சூப்பர்ஸ்டார்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள். யாருடைய படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்களோ யாருடைய படத்திற்கு வசூல் அதிகமாகிறதோ, யாருடைய படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க போட்டி போடுகிறார்களோ அவர் தான் சூப்பர்ஸ்டார் என்றார்.
KK
இந்த சாமி படத்தில் நடித்த விக்ரமுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார் ரஜினிகாந்த். அதே போல விஜயைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவரு நேர்ல ஒரு மாதிரி இருக்கார். திரையில் வேறு மாதிரி இருக்கிறார். அவரோட வசீகரா படத்தைப் பார்த்து நான் பிரமிச்சிப் போயிட்டேன் என்றும் தெரிவித்தார்.
சூர்யா நடித்த காக்க காக்க படத்தைப் பற்றி சொல்லும்போது, நான் மாறுவேடத்தில் அந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்குச் சென்றேன். மிக நேர்த்தியான போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார் என்றார்.
அதன்பிறகு 2004ல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜக்குபாய் படம் வெளியாவதாக விளம்பரம் வெளியானது. அந்தப் படத்திற்குத் திரைக்கதை சரியாக அமையவில்லை. ஏற்கனவே பாபா என்ற படம் தோல்வியான நிலையில், அவசரம் அவசரமாக எந்தப் படத்தையும் எடுக்க வேண்டாம் என்று நினைத்தார் ரஜினிகாந்த். அதனால் ஜக்குபாயை அப்படியே நிறுத்திக்கொண்டார்.
Dhanush: தனுஷ் நடிப்பில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி...
Dhanush: நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ். பார்த்திபன். நித்யாமேனன். அருண் விஜய்...
Swetha Mohan: தமிழக அரசு சார்பில் பல துறைகளிலும் சேர்ந்தவர்களுக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டு வருகிறது. பல நேரங்களில் அது சர்ச்சையாவதும்...
KPY Bala: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா....
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...