×

முதல்வனில் ஏன் விஜய் நடிக்கவில்லை? - ரகசியம் உடைத்த இயக்குனர் ஷங்கர்

 

ஜென்டில்மேன் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஷங்கர் காதலன், ஜீன்ஸ் என பிரம்மாண்ட பட இயக்குனராக மாறினார். அதன்பின்தான் ‘முதல்வன்’ படக்கதையை உருவாக்கினார். 

இப்படத்தில் ரஜினியை நடிக்க வைக்க ஷங்கர் ஆசைப்பட்டது உண்மை. ஆனால், அப்போது தன் மீது அரசியல் நிழல் படிந்துவிடும் என்பதால் ரஜினி மறுத்துவிட்டார். அதேபோல், விஜயை நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினார். ஆனால், அவரும் நடிக்கவில்லை. 

தற்போது அதற்கான காரணத்தை ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

முதலவனில் விஜயை நடிக்க வைப்பது தொடர்பாக தனது உதவியாளரை விஜயின் வீட்டிற்கு ஷங்கர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், ஷங்கரின் உதவியாளருக்கும் இடையே சரியான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எனவேதான், அர்ஜூனை ஷங்கர் நடிக்க வைத்தார். 

ஆனால், அதன்பின் இப்படத்தை மிஸ் செய்துவிட்டோமே என எஸ்.ஏ.சி. வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News