Connect with us
kamal

Cinema News

கவுண்டமணியை பார்த்து பயந்தாரா கமல்?.. சீக்ரெட்டை பகிர்ந்த பிரபல நடிகர்!..

தமிழ் சினிமா இருக்கிற வரைக்கும் இந்த ஜோடியை யாராலும் மறக்கமுடியாது. அவர்கள் தான் நடிகர் கவுண்டமணி மற்றும் நடிகர் செந்தில்.இருவரும் தனித்தனியான படங்களில் அறிமுகமானாலும் இருவரும் சேர்ந்து ‘வைதேகி காத்திருந்தால்’ படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார்கள்.

அதிலிருந்து இருவரும் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இவர்களுக்காக பல முன்னனி நடிகர்கள் காத்திருந்து நடித்த காலங்கள் ஏராளம். அந்த அளவுக்கு 80களில் இருந்து படு பிஸியாக கவுண்டமணியும் செந்திலும் நடித்து வந்தார்கள்.

இயக்குனர்கள் விரும்பும் நகைச்சுவை நடிகர்களாக இருந்ததனால் இவர்களுக்காக காத்திருந்து படங்களை முடித்த சம்பவம் பல அரங்கேறியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கவுண்டமணியின் கலாய் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகர்களையும் கலாய்க்க கூடியவராக கவுண்டமணி இருந்தார். ஏன் ரஜினி கூட ஷார்ட்டுக்கு முன்னாடி வந்து கவுண்டமணியிடம் ‘அண்ணே தயவு செய்து பார்த்து பேசுங்க, எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிராதீங்க’ என்று சொல்லிவிட்டு போவாராம்.

ஏனெனில் சொந்த வசனத்தாலும் கலாய் கொடுக்க கூடிய நடிகராகவும் இருந்தார் கவுண்டமணி. இதை சகஜமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நடிகர்கள் பலரும் இருந்தனர். ஆனால் கமல் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டாராம். அதனாலேயே கமல் , கவுண்டமணி காம்போவில் அதிக படங்கள் வரவில்லையாம். இந்த தகவலை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியின் போது கூறினார்.

இதையும் படிங்க : இந்த நடிகர் சொந்தமா வீடு வாங்கக்கூடாது- தடை போட்ட கலெக்டர்… அப்படி என்ன நடந்திருக்கும்!

Continue Reading

More in Cinema News

To Top