யோவ் மிலிட்ரி நீ எங்கயா இங்கே!.. கவர்னரை விஜய் சந்திக்கும் போது கூட யாரு இருக்கான்னு பார்த்தீங்களா?
விஜய் முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள நிலையில், அடுத்ததாக ஜன நாயகன் திரைப்படமும் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது. அடுத்த வாரம் சூர்யாவின் கருப்பு படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு இடையூறு இல்லாத வகையில் ஜன நாயகன் படத்தை மே 21 அல்லது மே 28ம் தேதிக்குள் ரிலீஸ் பண்ணப் போவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
அதற்கு முக்கிய காரணமே கவர்னரை சந்தித்து விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் போது விஜய்யுடன் கேவிஎன் தயாரிப்பு நிறுவனர் வெங்கட் கே நாராயணன் இருந்தது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இன்பதிர்ச்சியாக மாறியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 9ம் ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். விஜய்யை முதலமைச்சராக விடாமல் எப்படி தடுத்தார்களோ அதே போலத்தான் ஜன நாயகன் படத்திற்கும் தணிக்கைச் சான்று கொடுக்காமல் தடுத்தனர் என்று ரசிகர்கள் கூறினர்.
விஜய் முதலில் நீதிமன்றத்தை நாடி உச்ச நீதிமன்றம் வரை சென்றும் பலனளிக்காத நிலையில், அதை வாபஸ் வாங்கியும் படம் வெளியாகவில்லை. ஜன நாயகன் மொத்த படமே லீக்கான நிலையில், கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது.
இந்நிலையில், விஜய் முதல்வராக மாறியதும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து ரிலீஸுக்கு வழிவகை செய்வார் என்கிற நம்பிக்கையுடன் வந்த தயாரிப்பாளரையும் அழைத்துக் கொண்டு கவர்னரை சந்தித்துள்ளார் விஜய் என்கின்றனர்.
