இளையராஜா வேஸ்ட்தான்.. மறுபடியும் குட்டையை கிளப்பிய மிஷ்கின்

மிரட்டும் மிஷ்கின்; தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரும் சர்ச்சையை கிளப்பி வருபவர் மிஷ்கின். அதுவும் பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஸ்கின் பேசிய பேச்சு இன்றளவு இணையதளத்தில் பற்றி எரிகிறது. அதிலும் குறிப்பாக இளையராஜாவை ஒருமையில் பேசியது திரை பிரபலங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. அது போதாததற்கு சில கெட்ட வார்த்தைகளையும் பேசி அரங்கத்தையே நடுங்க வைத்தார் மிஷ்கின். அதற்கு பல திரைப்பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேசியதில் தவறா?: சமுத்திரக்கனி உட்பட மிஸ்கினுடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் அவருடைய போக்கே அப்படித்தான் .அன்பு அதிகமாகி விட்டால் கெட்ட வார்த்தைகளில் தான் பேசுவார் .அதனால் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியிருந்தார் சமுத்திரக்கனி. சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து சைக்கோ போன்ற திரில்லர் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.
வந்தாலே தீப்பொறி: அதைத் தாண்டி நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தார் மிஸ்கின். இவர் எந்த ஒரு விழா மேடைக்கு போனாலும் என்ன பேச போகிறார், எதைப்பற்றி பேச போகிறார், யாரைப் பற்றி பேசப் போகிறார் என்ற ஒரு ஆர்வத்தை கிரியேட் செய்து விடுவார். பாட்டில் ராதா படத்தில் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் மிஷ்கின். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கிய படங்களின் போஸ்டர்கள் வெளியிடும்போது அதில் வேறு யாரு பேரும் இருக்காது.
இளையராஜாதான் ஃபர்ஸ்ட்: இளையராஜா மற்றும் மிஷ்கின் இவர்கள் இருவரின் பெயர் தான் இருக்கும். எல்லா படங்களிலும் இந்த மாதிரி போஸ்டரை தான் வெளியிடுவார் மிஷ்கின். அதற்கு என்ன காரணம் என கேட்டபோது ஒரு படத்திற்கு மிக மிக முக்கியமே அந்த படத்தின் இமேஜ் தான். முதலில் கம்பெனி பெயர், அதன் பிறகு புகைப்படம், புகைப்படத்திற்கு கீழே இளையராஜாவின் பெயர் அவருக்கு பிறகு நான் இப்படித்தான் நான் போடுவேன். இந்த இமேஜ் தான் முக்கியமே தவிர பெயர்கள் முக்கியமில்லை. ஏன் இளையராஜா பெயரும் வேஸ்ட் .என்னுடைய பெயரும் வேஸ்ட் தான்.
இப்படித்தான் சித்திரம் பேசுதடி படத்தின் போது என்னுடைய பெயரை சேர்த்து போடவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் படத்தின் புகைப்படம் இவற்றை மட்டும் போட்டு வெளியிட்டேன். உடனே இயக்குனர் பி வாசு என்னை தொலைபேசியில் அழைத்து உன்னுடைய பெயரை போட வேண்டும் என வற்புறுத்தினார். சரி ட்ரெய்லரிலாவது எங்கள் பெயரை போடுங்களேன் என என்னுடைய டெக்னீசியன்கள் கேட்டாலும் ட்ரைலரில் அப்படி பெயரை போட்டாலும் ரசிகர்கள் பார்க்கும் பொழுது அதன் புகைப்படத்தை பார்ப்பார்களா அல்லது யார் யார் பெயர் இருக்கிறது என பார்ப்பார்களா?
அதனால் டிரைலரிலும் போட மாட்டேன். படத்தின் டைட்டில் சமயத்தில் தான் அவர்களின் பெயரே வெளியில் தெரிய வரும். இதற்கெல்லாம் ஒரே காரணம் புகைப்படம் மட்டும் முக்கியமே தவிர பெயர்கள் இல்லை என்பதுதான் .அதையும் மீறி என்னுடைய டெக்னீசியன்கள் சில பேர் உங்கள் பெயருக்கு பதிலாக எங்களுடைய பெயர்களையாவது போடுங்கள் என கேட்டு இருக்கிறார்கள். நானும் வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறினேன் என மிஸ்கின் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.