×

ஷங்கர் இயக்கத்தில் விஜய்தான் நடிக்க வேண்டியது... ஆனா ராம்சரண் வந்தது எப்படி?.....

 
shankar

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல பஞ்சாயத்துக்களால் முடங்கிக் கிடக்கிறது. ஷங்கரும் அந்நியன் 2 கதை தொடர்பாக அந்நியன் தயாரிப்பளருடன் பிரச்சனை, இந்தியன் 2வுக்காக லைக்கா நிறுவனத்துடன் பிரச்சனை, நீதிமன்றத்தில் வழக்கு என கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறார். இதிலிருந்து வெளியேறி தெலுங்கில் ராம்சரண படத்தை துவங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

உண்மையில், இந்தியன் 2 விற்கு பின் ஷங்கரும் விஜயுடன் ஒரு புதிய படத்தில் இணையவிருந்ததாம். ஆனால், விஜய்க்கு ரூ.100 கோடி சம்பளம், ஷங்கருக்கு ரூ.50 கோடி சம்பளம் என ரூ.150 கோடியை சம்பளமாக தர எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. அதோடு மற்ற செலவுகளை சேர்த்தால் படத்தின் பட்ஜெட் மொத்தமாக ரூ.250 கோடியை தாண்டி விடும். தற்போது சினிமா உள்ள நிலையில் அவ்வளவு தொகையை செலவு செய்ய எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை.

எனவேதான் , ராம்சரணுடன் ஷங்கர் இணைந்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும், ராம்சரணுக்கு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் சம்பளமாக கொடுக்கப்படவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News