×

சம்பளம் மட்டும் நீங்க.. மத்ததெல்லாம் அம்மாவா?... மாறுவாரா சிம்பு?...

 
simbu

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். பல தயாரிப்பாளர்களிடம் முன் பணம் வாங்கி விடுவார். ஆனால், கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பார். படப்பிடிப்பு சரியாக செல்லாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்துவார். படம் பாதியில் இருக்கும்போது சம்பளத்தை சேர்த்துக்கேட்டு தயாரிப்பாளரை கதற விடுவார். டப்பிங் பேச செல்ல மாட்டார். ஆனால், அவரின் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுவிடுவதால் அவரின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

simbu

திரைத்துறையில் பெற்றோரை வைத்து வளர்ந்த நடிகர்கள் பலர் உண்டு. கார்த்திக்,பிரபு துவங்கி இளம் நடிகர்களான தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா, கார்த்தி, விஜய், ஜீவா, விஷால் என பலரும் பெற்றோரின் மூலமே திரைத்துறைக்கு வந்தவர்கள். ஆனால், துவக்கத்தில் பெற்றோரின் தலையீடு இருந்தாலும் போகப்போக கதைகளை கேட்டு இயக்குனரை தேர்ந்தெடுப்பது, இதுதான் தன் சம்பளம் என நிர்ணயிப்பது, முக்கியமாக, படம் தொடர்பான பிரச்சனை என்றால் தானே சென்று தயாரிப்பாளரிடம் நேரிடையாக பேசி பிரச்சனைகளை முடிப்பது என தங்களை மாற்றிக்கொண்டார்கள். 

ஆனால், சிம்பு அப்படி இல்லை. கதை பிடித்திருந்தால் நடிப்பதாக சம்மதம் தெரிவித்துவிட்டு தனக்கு இதுதான் சம்பளம் என கறாராக கூறுவார். அதோடு சரி. மற்றபடி படம் தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர் உள்ளே வரமாட்டார். அவரின் தந்தை டி.ராஜேந்தரும், அம்மா உஷா ஆகியோர்தான் பஞ்சாயத்தில் ஈடுபடுவார்கள். 

actors

ஒரு பிரச்சனை எனும்போது சம்பந்தப்பட்ட நடிகர் அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினாலே 90 சதவீத பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால், அதை சிம்பு செய்வதே இல்லை என சினிமா விமர்சகர்களும், திரைத்துறையினரும் கூறுகிறார்கள். இதற்கு அவர் நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமே பெரிய சாட்சி.

சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டாலும், அதிகம் பாதிக்கப்பட்டவர் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இப்படத்தால் அவருக்கு பல கோடி நஷ்டம். 2 பாகம் என திட்டமிட்டு படத்தின் படப்பிடிப்பை துவங்கினார்கள். படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது. படப்பிடிப்பு குழு அங்கு சிம்புவுக்காக காத்திருக்க 5 நாட்கள் ஆகியும் சிம்பு செல்லவே இல்லை. மேலும், தயாரிப்பாளரை அழைத்து ‘எனக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லை. எனவே, 2 பாகங்கள் வேண்டாம். அதற்கு பதில் நான் வேறு படத்தில் நடித்துக்கொடுக்கிறேன். எடுத்தவரை ரிலீஸ் செய்துவிடுங்கள்’ என சிம்பு கூற வேறுவழியின்றி அவரை நம்பி தயாரிப்பாளர் படத்தை வெளியிட அது சூப்பர் பிளாப் ஆனது. 

simbu

அதோடு, அவருக்கு வேறுபடத்திலும் சிம்பு நடித்துக் கொடுக்கவில்லை. கேட்டால் எனக்கு சம்பள பாக்கி என சிம்பு கூற, மைக்கேல் ராயப்படன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் சிம்பு செல்லவில்லை. எனவே, அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. பல பஞ்சாயத்துக்களுக்கு பின் சமீபத்தில் சிம்பு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதில், முக்கிய விஷயம் என்னவெனில் இது தொடர்பான பஞ்யாயத்திற்கும் சிம்பு செல்லவில்லை. அவரின் தாய் உஷாதான் பஞ்சாயத்தை பேசி முடித்துள்ளார்.

simbu

பெற்றோருக்கு மதிப்பு கொடுப்பது சரிதான்.. சிம்புவின் கேரியர் மீது அவர்களுக்கு அக்கறை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வோம். ஆனால், பிரச்சனை என்று வரும் போது நேரிடையாக வந்து பேசாமல் அம்மா பின்னால் சிம்பு ஒளிந்து கொள்வது சரியில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்...

simbu

சிம்புவின் நடவடிக்கைகளால்தான் அவருக்கு பின்னால் நடிக்க வந்த தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, விஷால் உள்ளிட்ட பலரும் அதிக படங்களில் நடிப்பதோடு தங்களின் மார்க்கெட்டையும் நிலை நிறுத்தியுள்ளனர். திரைத்துறையில் அம்மா மற்றும் அப்பா பிள்ளையாக இருந்து மார்க்கெட்டை கோட்டை விட்ட நடிகர்கள் பலரும் உள்ளனர். நடிகர் பிரசாந்தே அதற்கு பெரிய சாட்சி.   

இதை புரிந்து கொண்டு மாறுவாரா சிம்பு?...

From around the web

Trending Videos

Tamilnadu News