×

தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் – தோனி மேல் கோபத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ள நாராயண் ஜெகதீசனை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளித்து அணியில் இருந்து தூக்கியுள்ளார் தோனி.

 

சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ள நாராயண் ஜெகதீசனை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளித்து அணியில் இருந்து தூக்கியுள்ளார் தோனி.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக கடந்த ஆண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டார் கோவையைச் சேர்ந்த ஜெகதீசன் நாராயண். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த பெங்களூர் அணிக்கு எதிரான 7 ஆவது போட்டியில் அவரைக் களமிறக்கினார் தோனி. அந்த போட்டியில் அவர் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு அறிமுக வீரராக அவர் தனது பங்களிப்பைக் கொடுத்திருந்தார். ஆனால் அதற்கடுத்த போட்டியிலேயே அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சாவ்லா 6 ஆவது பவுலராக சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசினார்.

இந்நிலையில் ஜெகதீசன் நீக்கப்பட்டது ஏன் சிஎஸ்கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தோனியோ ‘ஒரு இந்திய பேட்ஸ்மென் சிறப்பாக விளையாடாத நிலையில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்தான் தேவைப்பட்டது.

ஜெகதீசனை 7,8-ம் நிலையில் களமிறக்குவது சரியாக இருக்காது' எனப் பதிலளித்துள்ளார். ஆனால் இந்த பதிலில் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News