×

இயக்குனர் அவதாரம் ஏன் ? – மனம் திறந்த விஷால் !

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பது குறித்து விஷால் பேசியுள்ளார்.

 

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பது குறித்து விஷால் பேசியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதன் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் லண்டனில் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே மோதல் வெடித்தது.

மேலும் சைக்கோ படத்தின் வெற்றியால் மிஷ்கின் அதிகமாக சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மிஷ்கினை இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கிய விஷால் மீதி படத்தைத் தானே இயக்க இருக்கிறார். இதுகுறித்து இதுவரை மௌனம் காத்த விஷால் ’விலங்குகளைப் பற்றிய ஒரு திரைப்படத்தை நானே இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது இந்த படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் உற்சாகமாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். விஷால் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சில படங்கள் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News