×

தொடரி ஏன் பிளாப் ஆனது – மனம்திறந்து பேசிய பிரபுசாலமன்!

தனுஷை வைத்து தான் இயக்கிய தொடரி திரைப்படம் ஏன் சரியாக ஓடவில்லை என இயக்குனர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

 

தனுஷை வைத்து தான் இயக்கிய தொடரி திரைப்படம் ஏன் சரியாக ஓடவில்லை என இயக்குனர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

மைனா, கும்கி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரபு சாலமன் அதன் பின்னர் தனுஷை வைத்து தொடரி என்ற படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது அவர் காடன் என்ற மும்மொழி படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பிரபல வார இதழான ஆனந்த விகடனுக்கு அவர் அளித்துள்ள் பேட்டியில் தொடரியில் தான் செய்த தவறு குறித்து பேசியுள்ளார். அவரது பேட்டியின் ஒருபகுதி:-

``அந்தக் கதையை நான் தனுஷுக்குனு பண்ணல. அக்டோபர் ஷூட்டிங் போலாம்னு இருந்தோம். ஜூலையில ஷூட்டிங் போக வேண்டிய கட்டாயம். அதனால நல்லா டீடெயிலிங் பண்ணமுடியலை. தனுஷ் எனக்கு அவ்ளோ சப்போர்டா இருந்தார். ஆனா, அவர் நடிப்புக்கு என்னால அந்தப் படத்துல சரியா தீனி போடமுடியல. டீயெலிங் பண்ணாம, விஷுவல் எஃபெக்ட்ஸை மட்டும் நம்பிப் போகக்கூடாதுனு கத்துக்கிட்டேன். எல்லா இயக்குநர்களும் இந்த மாதிரி சூழலைக் கடந்துபோவாங்க. இந்தக் கதையை இந்தப் பூனையை வெச்சுதான் பண்ணணும்னா அதுதான் பண்ணனும்னு புரிஞ்சுகிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News