Categories: Cinema News latest news

சமந்தாவால் தான் கல்யாணத்தை தள்ளி போடுகிறாரா த்ரிஷா… வெளியான ஷாக் தகவல்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் லைம்லைட்டிற்கு திரும்பி இருக்கும் த்ரிஷா உண்மையில் ஏன் திருமணம் செய்ய மறுக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை த்ரிஷா:

1999ம் ஆண்டு மிஸ் சென்னையை வென்ற த்ரிஷா, சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் ஒரு காட்சிகளில் வந்து அப்ளாஸ் வாங்கினார். இவரின் முதல் படம் கையெழுத்து ஆனது என்னவோ லேசா லேசா தான். அதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலுக்கே ஹிட்டான எனக்கு 20 உனக்கு 18 படம் தான். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமானது.

Trisha

அதனால் அவரின் மூன்றாவது படமான மௌனம் பேசியதே முதல் படமாக ரிலீஸாகியது. திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சுமார் வெற்றியை தான் பெற்றது. ஆனால் த்ரிஷாவை மீடியா ஏகத்துக்கும் புகழ்ந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி த்ரிஷா தமிழ் சினிமாவின் சூப்பர் கண்டுபிடிப்பு தான் எனக் கூறினர். தொடர்ச்சியாக அவரின் சினிமா வாழ்க்கை உச்சத்திற்கே சென்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வந்தார்.

த்ரிஷாவும் காதலும்:

சினிமா வாழ்க்கையில் கொடிக்கட்டி பறந்து வரும் த்ரிஷாவிற்கு சொந்த வாழ்க்கையில் பிரச்னைகள் தான் இருக்கிறது. த்ரிஷாவிற்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் நிச்சயத்தார்த்தம் ஆனது. ஆனால் என்ன காரணமோ 5 மாதங்களில் திருமணம் நடக்காது என த்ரிஷா தரப்பில் அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதலில் விழுந்தார். அதுவும் சில காலம் மட்டுமே சென்றது. பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

Trisha

திருமண வாழ்க்கை மீதான பயம்:

திருமண வாழ்க்கையில் செட்டில் ஆக த்ரிஷாவிற்கும் ஆசை தான். சமீபத்தில் கூட திருமணம் பண்ணிக்கொண்டு என்னால் விவகாரத்து எல்லாம் பண்ண முடியாது என கூறியிருந்தார். இதுமட்டுமில்லையாம், சமந்தா தன் திருமண வாழ்க்கை குறித்து த்ரிஷாவிடம் பகிர்ந்து கொண்டாராம். அவரை போல தனக்கும் எதுவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என பயந்தே திருமணத்தை த்ரிஷா தவிர்க்கிறாராம்.

Samantha Akkineni

அதுமட்டுமல்லாமல் குடி பழக்கம் இருக்கும் த்ரிஷா ஏற்கனவே போதையில் பல இடங்களில் சண்டையிட்ட தகவல் எல்லாம் கோலிவுட்டில் அறிந்த கதையாகி இருக்கிறது. அதனால் தான் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் இப்படிப்பட்ட நேரத்தில் தன்னை கணவரும்,அவர் குடும்பத்தினரும் அடக்கலாம் என்பதே இவரின் திருமணத்தை தள்ளிப்போட காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily