
Cinema News
வேட்டை மன்னன் டிராப்க்கு காரணம் விக்னேஷ் சிவனா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!
Published on
இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு விளைவிற்கும் எதோ ஒரு நிகழ்வு தான் காரணமாக இருக்கும் என்பது ஒரு விதி. நாம் இன்று என்ன செய்கிறோமோ அதன் விளைவை தான் நாளை அறுவடை செய்வோம் என்பதும் ஒருவித தத்துவம் தான்.
அப்படி தான் தமிழ் சினிமாவில் ஒருவர் செய்த செயல் இன்னொருவருக்கு ஆபத்தாக வந்துள்ளது. இந்த மாதிரி சில சம்பவங்கள் நடந்துள்ளது. அப்படிதான் , விக்னேஷ் சிவன் செய்த ஒரு செயல் நெல்சனுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் அமைந்துவிட்டது.
அதாவது வேட்டை மன்னன் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்து வந்தார். அந்த படம் நெல்சன் திலீப்குமாருக்கு முதல் படம். சிம்பு நடித்து வந்தார். இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்க்கு காரணத்தை தயாரிப்பாளர் சக்கரவர்த்தி அண்மையில் கூறினார்.
அதாவது, சிம்புவுக்கு அது அப்போதே 30 கோடி பட்ஜெட் கொண்ட பெரிய படம். அது எடுக்கும் இடைவெளியில் தான் வாலு படத்தை எடுத்து முடித்தோம். ஆனால் அது ரிலீஸ் ஆவதற்கும் வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கிடையில் தான் விக்னேஷ் சிவன் இயக்கி சிம்பு நடித்த போடா போடி எனும் திரைப்படம் வெளியாகி படு மோசமான ரிசல்ட்டை கொடுத்தது.
இதையும் படியுங்களேன் – அஜித் உடன் பஞ்சாயத்து பேச நான் தான் சென்றேன்.! சினிமா பிரபலம் மூலம் வெளிவரும் உண்மை.!
அந்த படம் முழுக்க 2 கோடி அளவுக்கு தான் வசூல் கொடுத்ததாம். அதானல் வேட்டை மன்னன் படத்திற்கு பட்ஜெட் கிடைக்கவில்லை. பட ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போனது. அதன் பிறகு நெல்சன், என்னிடம் சார் வேறு வாய்ப்பு வந்துள்ளது என கேட்டார். சரி இந்த படம் இப்பொது ஆரம்பிப்பது போல தெரியவில்லை. நீங்கள் உங்கள் படத்தை ஆரம்பியுங்கள் என கூறிவிட்டார்.
இதனை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ஒரு வேலை விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி நன்றாக சென்றிருந்தால், சிம்புவின் வேட்டை மன்னன் படத்திற்கு பைனான்ஸ் எந்த தடங்கலும் இன்றி கிடைத்திருக்கும்.
Dhanush: இட்லி கடை படத்துக்கு தனுஷ் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகராக தன்னுடைய...
Vijay: கரூர் சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டு அவருடைய வலியை பகிர்ந்திருக்கிறார். இதோ அவர் பேசியது:...
Vijay TVK: கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் நிருபர் கேள்வி கேட்டார். இந்த மாதிரி நடந்துவிட்டது....
கரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்....
Vijay TVK: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எட்டு பேர் கொண்ட குழு இன்று கரூருக்கு சென்று ஆய்வு செய்ய...