Connect with us

Gossips

சொந்த ஊரில் யாரையும் அழைக்காத விக்னேஷ் சிவன்…நயன்தாரா கிடச்சா இப்படியா?….

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் மூலம் நல்ல இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 வருடங்களாக காதலித்து தற்போது இருவரும் தம்பதியராக மாறியுள்ளனர்.

விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் திருச்சி, லால்குடி ஆகும். அங்கு இவரது தந்தை வழி சொந்தக்காரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். முக்கியமாக இவரது பெரியப்பா மாணிக்கம், பெரியம்மா பிரேமா ஆகியோர் அங்கு வசிக்கின்றனர்.

இவர்களுக்கு எப்படியும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும் என்று பலரும் நினைத்து இருக்கையில், விக்னேஷ் சிவன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லையாம்.

இதற்கு காரணமாக, முதலில் நயன்தாராவை தான்  விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தெரிந்தவுடன் முதலில் சொந்தக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் விக்னேஸ்வரனின் தாயார் சொந்தக்காரர்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

இதையும் படியுங்களேன் – ஸ்வேதா மிஸ் நல்லா இருக்காங்களா.?! சிவகார்த்திகேயனின் அக்கறை.! கடுப்பாகிய எஸ்.ஜே.சூர்யா.!

இருந்தும் எப்படியும் திருமணத்திற்கு கண்டிப்பாக நம்மளை அழைப்பார்கள் என்று பெரியம்மா, பெரியப்பா உட்பட நெருங்கிய உறவுக்காரர் விக்னேஷ் சிவனின் அழைப்புக்காக காத்திருந்தனராம். ஆனால், இறுதிவரை விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அழைப்பிதழ் இதுவும் வரவில்லையாம். இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்ததாம்.

இருந்தாலும், விரைவில் தங்கள் வீட்டிற்கு விருந்திற்காகவாது தங்கள் வீட்டு மருமகள் நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் வரவேண்டும் என்று பெரியம்மா பிரேமா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அவர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு செல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top