
Cinema News
ஷங்கரின் மெகா ஹிட் படத்தை ஜஸ்ட் மிஸ் செய்த விஜய்!… 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை தகவல்கள்.!
Published on
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல்வன். இந்த திரைப்படம் கதை எழுதி முடித்துவிட்டு முதலாக முதன் முறையாக ரஜினியிடம் சென்று ஷங்கர் கதை கூறினாராம். ஆனால், இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரஜினி மறுத்துவிட்டாராம்.
அதன்பின்னர் இந்த கதை விஜய்க்கு சென்றதாம். அந்த சமயம் விஜய் வளர்ந்து வரும் இளம் நடிகர் என்பதால் விஜய்யின் தந்தை இப்படத்தை வேண்டாம் என்று கூறியதாக அப்போது தகவல் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தான் இயக்குனர் ஷங்கர் தனது முதல் பட நாயகன் அர்ஜுனை மீண்டும் முதல்வன் படத்தின் மூலம் நாயகனாக மாற்றினார்.
இந்த படத்தை பற்றி அண்மையில் ஷங்கர் பேசிக்கொண்டிருக்கையில், தொகுப்பாளர், ‘ முதலில் விஜய் இந்த படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. பிறகு அது நடக்காமல் போனது. அதற்கு உண்மையான காரணம் என்ன சார்.’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் ஷங்கர், ‘ என்னிடம் ஓர் அசோசியேட் இயக்குனர் இருந்தார். அவர்தான் விஜய் தரப்பிடம் பேசி விஜய்யை ஒப்பந்தம் செய்ய முற்பட்டனர். நான் அதில் தலையிட வில்லை. அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. விஜய்யின் கால்ஷீட் ஒத்துவரவில்லை என்று கூறி அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டனர்.
பிறகு வெகு நாட்கள் கழித்து எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை சந்தித்தார். அப்போது நீயும் நானும் நேரடியாக பேசி இருந்திருக்கலாம். அப்படி பேசி இருந்தால் நிச்சயம் விஜய் இந்த படத்தில் நடித்திருப்பார். தேவையில்லாமல் மூன்றாவதாக ஒரு நபரை நிர்ணயம் செய்து, அதன் மூலமாக இந்த பட வாய்ப்பு பறிபோய் விட்டது.’ என்று வேதனைப்பட்டாராம்.
இதையும் படியுங்களேன் – என்னை இரவுகளில் தூங்கவிடாமல் செய்தவர்கள்… சமந்தா வெளியிட்ட அந்த ரகசிய தகவல் இதோ…
இதற்கு இயக்குனர் ஷங்கர், ‘ விடுங்க சார், பார்த்துக்கொள்ளலாம், இந்த படம் இல்லை என்றால் என்ன? வேறு ஒரு படத்தில் விஜயை வைத்து ஒரு படம் எடுத்து விடலாம்.’ என்று அப்போது நம்பிக்கை கூறினாராம்.
இந்த தகவலை அண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு நீண்ட வருடம் கழித்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...