×

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது - வைரமுத்து ட்விட்!
 

கே.வி.ஆனந்த்தின் மரணத்தை எண்ணி வைரமுத்து கண்ணீர் பதிவு!
 
 
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது - வைரமுத்து ட்விட்!

திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். 

அவர் அயன், கவண், அநேகன், கோ, காப்பான் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர். மாரடைப்பில் இறந்த நிலையில் கே.வி. ஆனந்தின் உடலை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கொரொனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இறந்த அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது. 

இந்நிலையில் அவரது திடீர் மரணத்தை எண்ணி திரையுலகினர் பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதுகுறித்து கவிஞர்  வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

வருந்துகிறேன் நண்பா!

திரையில் 
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ. 

என பதிவிட்டுள்ளார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News