×

உறவினருடன் மனைவி உல்லாசம்.... ஓட ஓட விரட்டி கொலை செய்த கணவன்...

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன்(30). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மனைவி மகாலட்சுமி(27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
 

ரகுவரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் 10 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை பிரிந்து சென்னையில் உள்ள தனது உறவினர் பத்மபிரியா வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, பத்மபிரியாவின் மகன் விக்னேஷுடன்(25) அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.  எனவே, இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக லட்சுமிக்கு வேலை இல்லை. எனவே, திண்டிவனம் வந்து கணவர் வீட்டில் தங்கியுள்ளார். 

இந்நிலையில், மகாலட்சுமியை சந்திக்க விக்னேஷ் திண்டிவனம் வந்துள்ளார். கணவர் வெளியே சென்ற பின் விக்னேஷை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் லட்சுமி. வெளியே சென்ற ரகுவரன் சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்த கோலத்தை கண்டு கோபத்தில் கத்தியால் மனைவியை குத்த முயன்றுள்ளார். அதை விக்னேஷ் தடுக்க, அவரை குத்த பாய்ந்துள்ளார். எனவே, அலறியபடி விக்னேஷ் வெளியே ஓட ரகுவரன் அவரை விரட்டி விரட்டி குத்தியுள்ளார். இதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். எனவே, போலீசார் ரகுவரனை கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News