×

மனைவி தலையை வெட்டி ஒன்றரை கி.மீ ஊர்வலம் சென்ற கணவன்...
 

பட்டப்பகலில் மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு கணவன் நடந்து சென்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
 

உத்தரப்பிரதேசம் பரபங்கி மாவட்டத்தில் வசித்து வருபர் அகிலேஷ் ராவத். இவரின் மனைவி ரஜனி. 2 வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதன்பின், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் அவர்களுக்குள் மீண்டும் சண்டை வந்த போது ஆத்திரமடைந்த அகிலேஷ் ரஜனியை கடுமையாக தாக்கி வீட்டிற்கு வெளியே தள்ளியுள்ளார். கூர்மையான ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளார். இதில், ரஜனி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல், அவரது தலையை தனியாக வெட்டி கையில் பிடித்துக்கொண்டு பட்டப் பகல் என்றும் பாராமல் சாலையில் நடந்து சென்றார்.

இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். எனவே, போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை மறித்து அவரின் கையில் இருந்த தலையை பறிக்க முயன்றனர். அப்போது திடீரென அகிலேஷ் தேசிய கீதம் பாடினார். மேலும் பாரத் மாதா கி ஜே என்றும் முழக்கமிட்டார். அதன்பின் போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News