Nayanthara
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு பிறகு தன் மருமகள் நயன் குறித்து விக்னேஷ் தாயார் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகளால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தனது தனிப்பட்ட நடிப்பு மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.
nayan – wikky
முதலில் சிம்புவை காதலித்தார். ஆனால் இருவருக்கும் இடையில் ப்ரேக் அப் ஆனதை அடுத்து இயக்குனர் பிரபுதேவாவுடன் திருமணம் என செய்தி பரவியது. கையில் அவர் பெயரை பச்சை குத்தி கொண்டும் வலம் வந்தார். ஆனால் இந்த காதலுக்கும் சில நாளில் மூடுவிழா நடந்தது. இதில் கடுப்பான நயன் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதை தொடர்ந்து சிவாஜி படத்தின் ஒரு பாடலில் நடனம் ஆடி எண்ட்ரி கொடுத்தார்.
nayan-wikky
கொழு கொழுவென இருந்த நயன் இளைத்து அவரை கண்ட ரசிகர்களுக்கு ஆச்சரியமே மிஞ்சியது. இனி இவரால் சினிமாவில் உயர போகவே முடியாது என கிசுகிசுத்தனர். ஆனால் அதை அப்படியே தவிடு பொடியாக்கினார்.
தொடர்ச்சியாக நாயகி மையப்படுத்தப்பட்ட படங்களில் நடித்து ஹிட் நாயகியானார். அவர் நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தில் காது கேட்காமல் நடித்து அனைவரிடத்திலும் அப்ளாஸ் வாங்கினார்.
அப்படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவனுடம் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இருந்தும் இருதரப்பும் அமைதி போக்கையே கடைபிடித்தனர். ஆனாலும் பிறந்தநாள், விசேஷ நாட்களில் போட்டோவை வெளியிட்டு தங்கள் காதலை சூசகமாக கூறிக்கொண்டே வந்தனர்.
இந்த வருடம் இருவரும் முறையாக திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அடுத்த நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய வைரலானது. கடைசியில் இருவரும் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து அந்த சிக்கல் தீர்ந்தது.
Wikky- Meenakumari
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் தாயார் மீனாக்குமாரி தனது மருமகள் குறித்து பாராட்டி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், என்னுடைய மருமகள் வீட்டில் சமைக்க, துணிகளை பராமரிக்க, துடைக்க என மொத்தம் எட்டு பேர் வேலை செய்கிறார்கள்.
அவர்களை நயன் எப்போதுமே தன் குடும்ப ஆளாக தான் நடத்துவார். அங்கு வேலை செய்த அம்மா ஒருநாள் ரொம்ப கவலையாக இருந்தார். அவரை கவனித்த நயன் என்ன ஆனது என்றார். தனக்கு நான்கு லட்சம் கடன் இருப்பதாக அந்த அம்மா கூறினார்.
கொஞ்சமும் யோசிக்காமால் அந்த கடனை உடனே அடைத்தார் நயன். அவர் இங்கு பல வருடமாக வேலை செய்து உழைத்தவர் என்பதாலே இப்படி செய்ததாக நயன் கூறினார். அவர் அப்படி என்றால் கேரளாவிற்கு குடும்பமாக சென்றோம். அப்போ நயனின் தாயார் அந்த வேலைசெய்யும் அம்மாவுக்கு இரண்டு தங்க வளையலே போட்டுவிட்டார் எனக் கூறி இருக்கிறார்.
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…