×

கணவனைப் பழிவாங்க இந்த எல்லைக்கும் செல்வாரா ஒரு பெண்? அதிர்ச்சியான சம்பவம்!

சில மாதங்களுக்கு முன்னர் கணவனால் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் திரும்பி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சில மாதங்களுக்கு முன்னர் கணவனால் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் திரும்பி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவி லதாவைக் கொலை செய்ததாக லதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விஜய் சிங்கின் வீட்டுக்கு செல்ல அங்கு ரத்தம் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டுள்ளது. விஜய்யை போலிஸார் கைது செய்ய மகள் ருத்ரா தந்தைதான் அம்மாவைக் கொலை செய்ததாக சாட்சி சொன்னார். ஆனால் இந்த வழக்கில் லதாவின் உடல் மட்டும் கிடைக்கவில்லை.

ஆனால் விஜய் சிங்கோ தான் இந்த கொலையை செய்யவே இல்லை என சாதித்துள்ளார். இப்போது விஜய் சிறையில் இருக்கும் நிலையில் திடீரென லதா வீட்டுக்கு உயிருடன் வந்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க பொலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. தன் கணவனைப் பழிவாங்கவே அந்த பெண் இதுபோல நாடகமாடியது தெரியவந்துள்ளது. உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News