×

குணமானவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பா ? காஞ்சிபுரம் நபர் மீண்டும் மருத்துவமனையில் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து முழுவதுமாக குணமடைந்த நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து முழுவதுமாக குணமடைந்த நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வாரம் தெரிவித்தார். இதுகுறித்து தன் டிவிட்டரில்நம் மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாகக் குணமடைந்தார். இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ என அவர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர் இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவால் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற அவரை இப்போது மீண்டும் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அரசுத் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News