Categories: latest news television

‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்னதான் பிரச்சினை?.. மணிமேகலை அடுத்து வெளியேறும் மற்றுமொரு பிரபலம்?..

விஜய் டிவி மக்களின் பெரும் ஆதரவோடு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு வெற்றி பெறுவதற்கு காரணம் அங்கு நடக்கும் சில காமெடியாக அலும்பல்கள் தான்.
அதுவும் கோமாளியாக கலந்து கொண்டு பல பிரபலங்கள் ரசிகர்களுக்கு போரடிக்காதவாறு நிகழ்ச்சியை கொண்டு செலுத்துகின்றனர்.

cook1

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பெரிய செஃப் ஜாம்பவான்களான வெங்கட் பட் மற்றும் தாமோதரன் ஆரம்பத்தில் இருந்தே கலந்து கொண்டு தங்கள் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது விஜேவான ரக்‌ஷனும் அடுத்த ம.க.ப இவர்தான் என்பது போல மக்களிடம் ஒட்டிக் கொண்டார்.

குக்காக பல பிரபலங்கள் கடந்த 3 சீசன்களில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் கோமாளியாக புகழ்,சிவாங்கி, மணிமேகலை,குரேஜி, சுனிதா என எல்லா சீசன்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து திடீரென மணிமேகலை விலகியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

cook2

மேலும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது. ஏனெனில் கோமாளியாக மணிமேகலைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் மேலும் அந்த நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலகுவதாக தகவல்கள் வெளியானது. அதற்கு காரணம் அவர் பதிவிட்ட ட்விட் தான். அந்த பதிவில் இத்தனை ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த ஆதரவுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

அதை பார்த்ததும் இவரும் விலகப்போகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவர் பதிவிட்ட அடுத்த சில
மணி நேரங்களில் அந்த பதிவை அழித்துவிட்டு ‘உடல் மண்ணுக்கு உயிர் குக்வித் கோமாளிக்கு’ என்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

kureshi

அதனால் முதலில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்த குரேஷியை அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சமரசம் செய்து மீண்டும் அந்த நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றார் என்று செய்திகள் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : லைஃப்ல எந்த எல்லைக்கும் போறவரு.. ஒரு விஷயத்திற்கும் மட்டும் பயப்படுவாரு.. விஜய்சேதுபதி பற்றிய ரகசியத்தை பகிர்ந்த இயக்குனர்..

Published by
Rohini