×

ரோஹித் ஷர்மா இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டாரா? அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் எடுக்கப்படவில்லை.

 

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் எடுக்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது.

ஜனவரி மாதம் நடக்க இருக்கும் தொடருக்கான அணியில் ரோஹித் இல்லை என்பதால் அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட மாட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி ஒருவேளை அவர் விளையாடவில்லை எனில் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகபெப்ரிய பின்னடைவாக இருக்கும்.

From around the web

Trending Videos

Tamilnadu News