விஜய்யுடன் மோதுகிறாரா சமந்தா?.. அவரோட அடுத்த பட ரிலீஸ் தேதி வந்துடுச்சே!..
நடிகை சமந்தா நடித்துள்ள புதிய திரைப்படமான மா இண்டி பங்காரம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழு அவர்களது எக்ஸ் தளத்தின் மூலம் அறிவித்துள்ளனர்.
நடிகை சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் மா இண்டி பங்காரம் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். பெண் மையக் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சமந்தாவுடன் இணைந்து காந்தாரா 2வில் கலக்கிய குல்ஷன் தேவையா, திக்நத் மன்சலே, கௌதமி, ஸ்ரீமுகி, அஞ்சலி மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், சமந்தா இந்தப் படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
உமன் சென்ட்ரிக் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சமந்தா வித்தியாசமான மற்றும் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன் வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவின் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஜன நாயகன் திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 18ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், சமந்தாவின் படமும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு டார்கெட் செய்துள்ளது.
