Categories: Cinema News latest news

என் பொண்டாட்டிய பத்தி இனிமே பேசுவியா.?! மேடையேறி அறைந்த நடிகர்.!

2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது மதிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெற உலகில் அனைத்து திரை கலைஞர்களும் விரும்புவர்.

ஆனால், இந்த ஆஸ்கர் விழா மேடையிலேயே ஒருவரை ஆஸ்கர் விருது வாங்கிய நடிகர் அறைந்த சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதுவும் இந்த வருடம் தான் அந்த நாயகன் ஆஸ்கர் விருதை முதன் முதலாக வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது.

2021ஆம் ஆண்டு வெளியான கிங் ரிச்சர்ட் எனும் ஹாலிவுட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை  வில் ஸ்மித் பெற்றுள்ளார். இதுவே இவரது முதல் ஆஸ்கர் விருதாகும். இவர் பேட் பாய்ஸ் திரைப்படங்கள், அலாவுதீன், தி புர்ஸிட் ஆப் ஹேப்பினஸ்   போன்ற திரைப்படங்கள் மூலம் இந்திய அளவிலும் புகழ் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்களேன் – பீஸ்ட் உடன் கேஜிஎப்-2 மோதவில்லை.! விஜயை கண்டு பயந்துவிட்டாரா ராக்கி பாய்.!?

இந்த வருடம் நடந்த ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் மனைவியின் தலை முடி இல்லாதது குறித்து ஒரு காமெடி நடிகர் ஆஸ்கர் மேடையில் கிண்டலாக பேசியுள்ளார். இதனை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத வில் ஸ்மித், உடனே மேடையேறி ஆஸ்கர் மேடை என்று கூட பாராமல், அந்த நடிகரை மறைந்துவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

வில் ஸ்மித் மனைவிக்கு ஒரு நோய் இருந்தது வருகிறது. அதனால் தான் அவரது தலை முடி தொடர்ந்து முடி உதிர்ந்து வருகிறதாம். இது குறித்து கிண்டல் செய்ததால் தான் வில் ஸ்மித் மேடையேறி அறைந்ததாக கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan