×

ஹாலிவுட் சாதனையை முறியடிக்குமா மாஸ்டர்...? உடனே சண்டைக்கு வராதீங்க... உண்மை தான்!

மாஸ்டர் சாதனை பட்டியலில் புதிய எண்ட்ரி பலரை மிரள செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 29-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பொங்கலை ஒட்டி ஜனவரி 13-ம் தேதி தியேட்டர்களில் வெளியான மாஸ்டர் படம், கொரோனாவுக்குப் பிந்தைய சூழலில் ரசிகர்களைக் கவர்ந்தது. அவர்களை ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின்னர் குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவழைத்தது மாஸ்டர். தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தநிலையில், படத்தை பெரும் தொகை கொடுத்து அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிட்டது.

படம் வெளியாகி 16 நாட்களிலேயே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்ட மாஸ்டருக்கு ஆன்லைனிலும் ரசிகர்கள் பிரமாண்டமாக வரவேற்புக் கொடுத்திருக்கிறார்கள். முதல் நாளிலேயே அமேசான் பிரைமில் மாஸ்டர் படத்தை 92 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதேபோல், முதல் வீக் எண்டில் மட்டும் 2.80 கோடி பேர் படத்தைப் பார்த்திருப்பதாக அமேசான் பிரைம் சொல்லியிருக்கிறது. இது பெரிய ஹாலிவுட் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்புக்கு இணையானது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் தியேட்டர் வசூல் மட்டும் உலக அளவில் 225 கோடி ரூபாயைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News