×

இந்த படமாவது சூர்யாவை காப்பாற்றுமா? - ஆவலுடன் ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் சூரரை போற்று படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. காரணம்,  சூர்யா இதற்கு முன் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அதோடு, இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார்.
 
விமான சேவை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நமக்கு கிடைத்த தகவல் படி சூரரை போற்று படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகின்றது. ஏனெனில் சூரரை போற்று படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருவதாக இருந்து தற்போது கொரோனா அச்சத்தால் தள்ளி சென்றுள்ளது.

இப்படம் கண்டிப்பாக சூர்யாவிற்கு பெரும் திருப்பமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News