×

விமல் நிலைமை இப்படி ஆகிப்போச்சே! -  சம்பளம் எவ்வளவு தெரியுமா?
 

மார்கெட் இல்லாததால் நடிகர் விமல் தனது சம்பளத்தை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
 

சினிமாவை பொறுத்தவரை மார்கெட் நிலவரமே நடிகர், நடிகையரின் சம்பளத்தை தீர்மானிக்கிறது. களவாணி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விமல். அதன்பின் மளமளவென திரைப்படங்களில் நடித்தார். தனது சம்பளத்தை ஒரு கோடி வரை உயர்த்தினார்.

ஆனால், கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை பெறவில்லை. எனவே, வாய்ப்புகள் குறைந்தது. 

இந்நிலையில், தனது சம்பளத்தை ஒரு கோடியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கு அவர் குறைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து ஓரிரு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News