×

துடைத்தெரிந்த துடைப்பம் - டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி!

தலைநகர் டெல்லியில் ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிப்பது  உறுதியாகியுள்ளது.
 

டெல்லியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி முதல் இடத்தையும், பாஜக 2ம் இடத்தையும், 3ம் இடத்தை காங்கிரஸும் பெற்று வந்தது.

மொத்தம் 70 தொகுதிகள் அடங்கிய டெல்லியில் தற்போதையை நிலவரப்படி 58 இடங்களில் ஆம் ஆத்மியும், 12 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகித்த்து வருகிறது. மேலும், 3 தொகுதிகளில் ஆத் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆம் ஆத்மி அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 3வது முறையாக  ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த வெற்றி பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 53.50 சதவித வாக்குகளையும், பாஜக 38.79 சதவீத வாக்குகளையும், 4.28 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News