×

அட்வான்ஸ் வாங்கியதோட சரி… ஆளயக் காணோம் – அந்தாதூன் படத்தில் இருந்து மோகன் ராஜா விலகிய பின்னணி!

அந்தாதூன் தமிழ் ரீமேக்கை இயக்க மோகன் ராஜாவுக்குப் பதில் இப்போது பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

அந்தாதூன் தமிழ் ரீமேக்கை இயக்க மோகன் ராஜாவுக்குப் பதில் இப்போது பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம்அந்தாதூன். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார்.  இந்த  படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டன. மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது இயக்குனர் மோகன் ராஜா படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதற்கான பின்னணி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி இந்த படத்தை இயக்குவதற்காக ஒரு கோடிக்கும் மேல் அட்வான்ஸ் வாங்கிய மோகன் ராஜா அதன் பிறகு படத்துக்காக எந்த வேலையும் செய்யாமல் இருந்துள்ளார். படம் குறித்து கேட்ட போதெல்லாம் இதோ அதோ என்று இழுத்தடிக்க ஒரு கட்டத்தில் கடுப்பான தயாரிப்பாளர் தியாகராஜன் படத்தில் இருந்து அவரை நீக்கியுள்ளாராம். அதையடுத்து இப்போது பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக்கை இயக்குனராக நியமித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News