Categories: Cinema News latest news

அனிருத்தை கடைசி வரை நம்பாத லோகேஷ் கனகராஜ்!.. எல்லாத்துக்கும் ஜெயிலர் படத்துல அவர் பண்ண வேலை தான் காரணமா?..

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியே அனிருத் கையில் தான் இருந்தது என சூப்பர் ஸ்டாரே பாராட்டி இருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அனிருத்துக்கும் கார் மற்றும் செக்கை வழங்கியிருந்தார்.

ஆனால் லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் அந்த அளவுக்கு அனிருத்தை நம்பவில்லை என்றும் அனிருத் இந்த படத்தில் இல்லை என்றாலும் படம் பிளாக்பஸ்டர் தான் என்கிற அளவுக்குத்தான் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என ரத்னகுமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கலர் கலரா பேனா வச்சிருந்தும் கதை வர மாட்டுதே!.. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்த செல்வராகவன்!..

ஜெயலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்த பின்னணி இசை மற்றும் காவாலா, ஹுகும், ஜுஜுபி, ரத்தமாரே உள்ளிட்ட பாடல்கள் தான் ஹைலைட் என்றும் ரீ ரெக்கார்டிங் செய்யாமல் படத்தை பார்த்த போது அபவ் ஆவரேஜ் படம் தான் என ரஜினிகாந்தே ஜெயிலர் வெற்றி விழாவில் வெளிப்படையாக பேசி அனிருத் தான் கடைசி வரை தூணாக இருந்து அந்த படத்தை தூக்கி நிறுத்தி இத்தனை கோடி வசூல் ஈட்ட காரணமாக இருந்தார் என்கிற உண்மையை வெளிப்படையாக போட்டு உடைத்திருந்தார்.

இந்நிலையில், லியோ படத்திற்கும் அனிருத் தான் தூணாக இருந்து தூக்கி நிறுத்தியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தில் இல்லை என்றால் கூட எந்தவொரு பாதிப்பும் இருந்திருக்காது என்கிற அளவுக்கு பேசியிருக்கிறார் ரத்னகுமார்.

இதையும் படிங்க: லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.

அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை வலுவாக உருவாக்கி நடிகர் விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த நடிகர்களிடம் வேலை வாங்கி உள்ளார் எனக் கூறியுள்ளார்.

அனிருத் இல்லாமலே லியோ பிளாக்பஸ்டர் தான் என்றும், அனிருத்தின் டச் இருப்பதால் படம் டபுள் பிளாக்பஸ்டர் என சமீபத்தில் அளித்த பேட்டியில் ரத்னகுமார் கூறியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M