Categories: Cinema News latest news throwback stories

அட்வான்ஸ் கொடுக்க கூட பணம் இல்ல!.. படமோ சூப்பர் ஹிட்!… இது எப்படி சாத்தியம்?..

தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் பிரபலங்களை பார்க்க போனாலே கையில் காசுடன் சென்றால் தான் மரியாதையே கிடைக்கும். அப்படி பட்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் ஒரு வெற்றிப் படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர்.

amara deepam

ஆம். அதுவும் ஒரு காலத்தில் புகழ்பெற்ற வீனஸ் நிறுவனம் தான் இந்த செயலில் ஈடுபட்டிருந்தது. வீனஸ் நிறுவனத்தை மூன்று பேர் சேர்ந்த கூட்டணியில் உருவாக்கினர். இயக்குனர் ஸ்ரீதர், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கவும் இவர்கள் மூவரிடமும் ஒரு பைசா கூட இல்லை. இயக்குனர் ஸ்ரீதர் தெலுங்கில் இருந்து வரும் படங்களின் தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தாவாக செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் கையில் 5000 ரூபாய் இருந்தது. மீதமுள்ள பணத்தை மற்ற இருவர் பிரித்து கொடுத்தனர்.

sridhar

ஒரு வழியாக நிறுவனத்தை ஆரம்பித்த அவர்கள் ‘அமரதீபம்’ என்ற படத்தின் கதையை ஸ்ரீதர் சொல்ல அவர்களுக்கு பிடித்துப் போனது. படத்தின் கதைப்படி இரு நாயகிகள் தேவைப்பட ஒன்று பத்மினி, மற்றொருவர் சாவித்ரி. ஆனால் இவர்கள் அந்தக் கால கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த நாயகிகள். அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் எப்படி சந்திப்பது என்று யோசிக்க,

ஏற்கெனவே சிவாஜியிடம் நல்ல பழக்கம் இருந்த ஸ்ரீதருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. நாயகனாக சிவாஜியை கமிட் செய்ததை சிவாஜியிடம் சொல்ல அவர் வீட்டிற்கு சென்றார். கதை சிவாஜிக்கும் பிடித்துப் போக ஆனால் அட்வான்ஸ் கொடுக்க காசு இல்லை என்பதையும் ஸ்ரீதர் சொல்லிவிட்டார்..

sivaji

மேலும் நீங்கள் சம்மதித்தால் நாளைக்கே பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து விடுவேன். அதை பார்த்து நிறைய வினியோகஸ்தரர்கள் பணம் கொடுக்க முன்வருவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட சிவாஜி பரவாயில்லை, நாளைக்கு விளம்பரம் கொடுத்துவிடு, நான் நடிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க : அட என்னப்பா சொல்றீங்க ?.. இந்தப் படத்தை தயாரிச்சது விஜயா?.. அதுவும் இவரது இயக்கத்திலா?..

அதன் பிறகே பத்மினிம் சாவித்ரியை சந்தித்து சிவாஜி ஓகே சொன்னதையும் தன்னிடம் அட்வான்ஸ் இல்லாததையும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் பரவாயில்லை, மெதுவாக கொடுத்துக்கலாம் என்று சொல்லி நடிக்க முன்வந்திருக்கின்றனர். இதன் மூலம் ஆரம்பமானதே ‘அமரதீபம்’ திரைப்படம். படம் வெளியாகி எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini