×

பாடலில் அந்த மாதிரியான வார்த்தைகள் இல்லாமல் பாத்துக்கோ – யுவனுக்கு அட்வைஸ் செய்த இளையராஜா!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் அமைப்பது தன் தந்தை தனக்கு கூறிய அறிவுரைகள் குறித்து பேசியுள்ளார்.

 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் அமைப்பது தன் தந்தை தனக்கு கூறிய அறிவுரைகள் குறித்து பேசியுள்ளார்.

இளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பரபரப்பான இசையமைப்பாளராக விளங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இளையராஜா தன் இசை இல்லாமல் யுவனுக்காக மட்டும்தான் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் யுவன் ஒரு நேர்காணலை அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ள யுவன் பாடல்கள் அமைப்பது பற்றி இளையராஜா அவருக்குக் கூறிய அறிவுரைப் பற்றியும் கூறியுள்ளார்.

இதுபற்றி ‘என் அப்பா எனக்கு அதிகமாக அறிவுரைகள் கூற மாட்டார். ஒரு முறை என் பாடலைக் கேட்ட அவர் அதில் உனக்காகவே சாவேன் என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்டு, பாடல்களில் எதிர்மறையான வார்த்தைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள். அந்த எதிர்மறை உணர்ச்சி கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும் எனக் கூறினார்’ என யுவன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News