×

போலிசுடன் டிக்டாக்கில் டூயட் ஆடிய பெண்... மாமா டிரவுசர் கலண்டுச்சு!

நர்ஸ் வேலை விட்டு விட்டு துணை நடிகையாக நடித்து வரும் பெண் சக பணியாளருடன் போலீஸ் உடையில் காதல் பாடலுக்கு டூயட் பாடிய ஜோடியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 
 

போலீஸ் சீருடையில் பணத்தால் எதையும் வாங்க முடியும் என்று பஞ்ச் டயலாக் பேசி வீடியோ வெளியிட்ட போது கூட அவருக்கு சிக்கலில்லை..! காவலர் உடையில் உள்ளவருடன் ஜோடியாக எப்போது காவல் கீதம் பாடினாரோ அன்றே வில்லங்கம் அவரை தேடிச்சென்று சர்ச்சைக்குள் அழைத்து வந்திருக்கின்றது.

அத்தோடில்லாமல் உதவி காவல் ஆய்வாளர் உடையில் உள்ள ஒருவருடன் அந்த பெண் சாதாரண உடையில் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வெளியானது. டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐடியில் உள்ள வீடியோக்களை வைத்து அவர் நர்சாக இருந்து துணை நடிகையான ஸ்ரீனிகா என்பதை கண்டறிந்தனர். சினிமாவில் பெண் போலீசாக நடித்துவரும் அவர், லைக்கிற்கு ஆசைப்பட்டு இது போன்ற சேட்டைகளை செய்து வருவது தெரியவந்தது.

டிக்டாக்கில் நவரசத்தையும், நடிப்பாக கொட்டுவதாக நினைத்து, கண்ணியமிக்க காவல்துறையை இழிவுபடுத்துவது போல வீடியோ பதிவிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே காவல்துறையினர் எச்சரித்துள்ளது

நடித்த பெண்ணையும் அவருடன் ஜோடி போட்ட நபரின் டவுசரை கலட்ட போலிஸ் வளை வீசி தேடி வருகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News