×

கள்ளக்காதலனை மருமகனாக்கிய பெண்… உண்மையறிந்த மகனை கொலை – அதிரவைக்கும் உண்மை !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை என்ற பகுதியில் வசித்து வந்த வசந்தா என்ற பெண் தன் கள்ளக்காதலுக்காக மகனையேக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா எனும் பெண். இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து செல்ல, 20 வயது மகள் மற்றும் 13 வயது லால் கிருஷ்ணன் என்ற மகனோடு வசித்து வந்துள்ளார். தன் மகளுக்கு அவரை விட 15 வயது மூத்தவரான சுபனன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக வசந்தாவின் மகன் லால் கிருஷ்ணன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இறந்துள்ளான். இது சம்மந்தமாக ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதியப் பட்டுள்ளது. ஆனால் வசந்தாவின் கணவர் தன் மகன் சாவில் மனைவியின் மேல் சந்தேகம் இருப்பதாக போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் வசந்தாவை ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வசந்தாவுக்கும் சுபணனுக்கும் தகாத உறவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறவு நீண்டகாலமாக இருப்பதாகவும் அது வெளியே தெரியக் கூடாது என்பதற்காகதான் அவரைத் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் இவர்களின் உறவைப் பற்றி அறிந்துவிட்ட மகனைத் தூக்கமாத்திரைகள் போட்டு கொலை செய்துள்ள அதிர்ச்சியான உண்மையும் வெளியாகியுள்ளது.

இப்போது அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News