×

இந்தியாவில் திருமணத்திற்காக விற்பனை செய்யப்படும் பெண்கள்!

இந்தியாவில் பெண்கள் திருமணத்திற்காக விற்பனை செய்ப்படுவது பற்றி பார்க்கலாம் வாருங்கள். இந்தியாவில் திருமணத்திற்காக பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள் என சொன்னால் நம்புவீர்களா? ஆனா உண்மையில் பெண்கள் விற்பனை செய்யப்படும் சம்பவம் இந்தியாவில் நடக்கத்தான் செய்கிறது.
 

அதுவும் சட்டத்திற்க உட்பட்டு. இதை பற்றி விரிவாக காணலாம் வாருங்கள். இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை திருமணம். இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் தான் இருப்பதாக பாலின விகிதம் கூறுகிறது. இதனால் பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் பலர் திருமணம் முடிக்காமல் தவித்து வரும் சூழ் நிலையில் இருக்கன்றனர்.

இது ஒரு புறம் இருக்க என்னதான் பெண்கள் கிடைக்க இந்தியாவில் தட்டுப்பாடு இருந்தாலும் இந்தியாவில் ஏழை குடும்பங்கள் பல உள்ளன.அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் திருமணத்திற்கு மணமகன் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஒருபக்கம் மணமகள் இல்லாமல் ஆண்கள், மறு பக்கம் மணமகன் கிடைக்காமல் பெண்கள் இருக்கின்றனர்.

இதனால் ஏழை விட்டு பெண்களுக்கு திருமணம் ஒரு பெரும் கனவாக இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் எல்லோரும் ஆச்சரிப்படும் வகையில் இந்தியாவில் ஒரு சம்பவம் நடக்கிறது யாராலும் கற்பனையிலும் நினைக்க முடியாத நிகழ்வு அது பெண்கள் எல்லாம் திருமணத்திற்காக விற்கப்படும் சந்தை தான் அது.

இந்த சந்தையில் தன் மகளை திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர்கள் தங்கள் மகளை அந்த சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்த சந்தைக்கு தனக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காதவர்கள் வந்து அங்குள்ள பெண்ணை பார்த்து அந்த பெண்ணின் பெற்றொரிடம் பேசி அந்த பெண்ணை திருமணம் செய்ய அழைத்து செல்வார்கள்.

இவ்வாறாக அழைத்து செல்லும் போது அந்த பெண்ணின் பெற்றொருக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள். இது தான் இந்த சந்தையின் செயல்பாடு. இந்த சந்தையில் பெண்ணை வாங்குபவர்கள் கட்டாயம் அவர்களை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் அடிமையாக பயன்படுத்தக்கூடாது என்பது விதி.

சில நேரங்களில் அந்த பகுதியில் ஒரு பெண் விற்பனைக்கு இருக்கிறாள் என விளம்பரமும் செய்வார்கள். இதே போன் நடைமுறை இந்தியாவில் வட மாநிலங்களில் இருந்து வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர்கள் அந்த பெண்களை பணத்திற்காக அந்த சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

குறிப்பாக மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இந்த சந்தையில் விற்பனைக்கு வருகின்றனர். இந்த பெண்களை அவர்களது பெற்றோர்கள் சுமார் 50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை சராசரியாக விற்பனை செய்கின்றனர். இன்றும் இவ்வாறான சந்தைகள் நடக்கத்தான் செய்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News