ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம் - திமுக கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு
Sat, 2 Jan 2021

திமுக தமிழகத்தில் உள்ள பல ஊர்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கோவை தொண்டமுத்தூர் பகுதியில் இன்று காலை முதல்வர் அக்கூட்டம் நடைபெற்று வந்தது. அப்போது, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒரு பெண் பல கேள்விகளை எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த ஸ்டலின் ‘என்னிடம் கொடுத்த பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள். அதனால்தான் தேவையில்லாத கேள்விகளை கேட்கிறீர்கள் எனக் கூறினார். அதன்பின் அங்கிருந்த பெண்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.இதனால் அங்கு கொஞ்சம் நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.